ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2024 (11:33 IST)

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

share
நேற்று பங்குச் சந்தை ஆரம்பத்தில் உயர்ந்திருந்தாலும், வர்த்தக முடிவில் இறங்கிய நிலையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இன்றும் பங்குச் சந்தை இறங்கியுள்ளதால், முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
இன்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 267 புள்ளிகள் சரிந்து 80,896 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. அதேபோல், தேசிய பங்கு சந்தை நிஃப்டி 92 புள்ளிகள் சரிந்து 24,189 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
பங்குச் சந்தை சில நாட்கள் சரிவில் இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva