மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
ஒரு பக்கம் இஸ்ரேல் மற்றும் ஈரான் போர், இன்னொரு பக்கம் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக, கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை படு மோசமாக சரிந்த நிலையில், நேற்று ஓரளவு பங்குச் சந்தை உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது. இந்த நிலையில், இன்றும் பங்குச் சந்தை உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 329 புள்ளிகள் உயர்ந்து, 81,969 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச் சந்தை நிப்டி 117 புள்ளிகள் உயர்ந்து, 25,530 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல். டெக்னாலஜி பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், எச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐ.டி.சி. பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சில நாட்கள் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும், எனவே புதிதாக முதலீடு செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன், தகுந்த ஆலோசனை கேட்டு மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva