தொடர்புடைய செய்திகள்
- ஒரு வாரத்தில் உச்சம் சென்ற பங்குச்சந்தை இன்று சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!
- இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. அமெரிக்கா எடுத்த முடிவு காரணமா?
- 4 நாட்கள் தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றும் காளையின் பிடியில் சென்செக்ஸ்..!
- அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைப்பு: உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை..!
தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்றும் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் புதிய உச்சமாக நேற்று 84 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் இன்று 85 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்ந்து 84 ஆயிரத்து 95 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 25 ஆயிரத்து 943 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், புதிய முதலீட்டாளர்கள் மிகவும் ஜாக்கிரதையாக முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஸ்டேட் வங்கி, ஆசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் லீவர், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
