புதன், 25 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2024 (10:22 IST)

கமலா ஹாரிஸ் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு! அமெரிக்காவில் பரபரப்பு!

Kamala Harris

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அமெரிக்காவில் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும் மோதிக் கொள்கின்றனர். இதனால் நாடு முழுவதும் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன.

கடந்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் பிரச்சாரம் செய்தபோது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ட்ரம்ப்பின் காதில் தோட்டா உரசி சென்றதால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இந்நிலையில் தற்போது கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கி தாக்குதல் நடந்துள்ளது.

 

அரிசோனா மாகாணத்தின் டெம்பேவில் சதர்ன் அவென்யு ப்ரீஸ்ட் ட்ரைவ் அருகே உள்ள கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகம் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் அலுவலக சுவர்களில் தோட்டா பாய்ந்திருந்த நிலையில், ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. அலுவலகத்தில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K