திங்கள், 16 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (11:23 IST)

ஒரே நாளில் அதள பாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு..!

பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கமின்றி வர்த்தகம் ஆகி வந்த நிலையில் இன்று திடீரென கிட்டத்தட்ட 900 புள்ளிகள் சரிந்து இருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சற்றுமுன் 860 புள்ளிகள் சார்ந்து 81 ஆயிரத்து 345 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 254 புள்ளிகள் சேர்ந்து 24 ஆயிரத்து 887 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
பங்குச்சந்தை ஒரே நாளில் கிட்டத்தட்ட 900 சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இந்த சரிவை பயன்படுத்தி புதிய பங்குகளை வாங்கிக் கொள்ளலாம் என்று பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இன்றைய பங்குச்சந்தையில் கோல்ட் பீஸ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உள்பட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் மற்றபடி கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva