1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty

உச்சம் நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. 82000ஐ நெருங்கியது செக்செக்ஸ்..!

share
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இந்த வாரம் முழுவதுமே கிட்டத்தட்ட பங்குச்சந்தை ஏற்றத்தில் தான் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 164 புள்ளிகள் உயர்ந்து 81903 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 78 புள்ளிகளும் உயர்ந்து 25 ஆயிரத்து 27 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் இந்துஸ்தான் லீவர், இன்போசிஸ், ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி, சன் பார்மா, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கமலா ஹாரிஸ் இந்தியரா? ஆப்ரிக்க அமெரிக்கரா? பதில் சொல்ல வேண்டும்: டிரம்ப்