தொடர்புடைய செய்திகள்
- நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?
- பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?
- 2 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- பங்குச்சந்தை இரண்டாவது நாளாக ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று சிறிய அளவில் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்திய பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை 77 புள்ளிகள் உயர்ந்து 74,030 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 10 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 22,555 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்றம் இன்றி இருக்கும் நிலையே தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு பங்குச்சந்தையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva
