1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : புதன், 8 மே 2024 (11:20 IST)

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

இந்திய பங்குச்சந்தை நேற்று பெரும் சரிவை கண்ட நிலையில் இன்றும் சரிவடைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இன்றி வர்த்தகமாகி வந்த நிலையில் நேற்று திடீரென கிட்டத்தட்ட சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. 
 
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை சரிந்துள்ளதாகவும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 241 புள்ளிகள் குறைந்து 73 ஆயிரத்து 279 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருவதாகவும் தெரிகிறது 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 54 புள்ளிகள் குறைந்து 22,237 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆக்கி வருகிறது. தொடர்ந்து பங்கு சந்தை இந்த வாரம் முழுவதும் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, ஏர்டெல், எல் அண்ட் டி உள்பட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் மற்ற பல நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
 
Edited by Siva