1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (11:58 IST)

75,000ஐ நெருங்கியது சென்செக்ஸ்.. தொடர் ஏற்றத்தால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

share
நேற்று வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை உச்சத்துக்கு சென்றது என்றும் நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்பதும் சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை 278 புள்ளிகள் உயர்ந்து 74 ஆயிரத்து 950 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தை நெற்றி 88 புள்ளிகள் உயர்ந்து 22732 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டிப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்ததும் இன்னும் உச்சத்துக்கு செல்லும் என்று கூறப்படுகிறது 
 
மேலும் சென்செக்ஸ் 75 ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் தேர்தலுக்குப் பின் 80,000 வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது . இன்றும் பெரும்பாலான பங்குகள் ஒய்ந்துள்ளதாகவும் இன்போசிஸ், கோடக் பேங்க், பார்தி ஏர்டெல் உள்பட ஒரு சில பங்குகள் மட்டுமே குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva