நேற்றைய விடுமுறைக்கு பின் பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
நேற்று மே 1 உழைப்பாளர் தினம் என்பதால் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலையில் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் ஏற்றத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்து 74 ஆயிரத்து 598 என்ற பள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 22,638 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், பாலாஜி பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட வங்கிகள் உயர்ந்துள்ளதாகவும் ஐசிஐசிஐ வங்கி, ஏர்டெல் நிறுவனம், ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் சரிந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் பங்குச்சந்தை உச்சம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Siva