1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

உயர்ந்து கொண்டே வந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

Gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
தங்கத்தின் விலை கடந்த ஒரே வாரத்தில் ஒரு சவரன் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில் இன்னும் தங்கம் விலை உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவே நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இருப்பினும் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு என் நிம்மதியை அளித்துள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய்   7,285 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்   58,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,940 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,520 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 104.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  104,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இன்றும் மந்தமாக வர்த்தகமாகும் பங்குச்சந்தை. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!