Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று சற்று குறைவு.. ஆனாலும் ரூ.7000க்கு மேல் விற்பனை..!

Written By Siva
Updated: திங்கள், 30 செப்டம்பர் 2024 (10:00 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதும் சமீபத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7000க்கு அதிகமாக விற்பனையாகி வருவது தங்க நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய்   7,080 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து  ரூபாய் 56,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,535  எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

சென்னையில் ரூ.30-க்கு சன்னரக அரிசி எங்கெங்கே கிடைக்கும்.. கடைகள் மற்றும் தொடர்பு எண்களை அறிவித்தது கூட்டுறவுத்துறை!

'அர்னாப்' புயல் கரையை கடப்பது எங்கே? எப்போது? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: திருமண முன்பணம் ரூ.5 லட்சம் பெறுவதற்கான புதிய அரசாணை வெளியீடு!

பல வருடங்கள் மின்வாரியத்தில் நடந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி! அதிரடி உத்தரவால் பரபரப்பு...

1 ரூபாய் லஞ்சம் கொடுக்காமல் இடமாறுதல்.. மின்சார துறையில் புரட்சி.. இதுதான் மாற்றம்...

அடுத்த கட்டுரையில்
Show comments