13 மாவட்டங்களில் இன்றிரவு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva