1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (11:53 IST)

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

Blood Cell

26 வயதான ஸ்மிதாவின் உதவியுடன் ஃபான்கோனி அனீமியாவால் பாதிக்கப்பட்ட செல்வா மறுஜென்மம் பெற்றார்

 

 

 

சென்னை, செப்டம்பர் 27, 2024: மனிதாபிமானத்தின் நற்பண்பை எடுத்துரைக்கும் இந்த மனதைத் தொடும் நிகழ்வில், ஃபான்கோனி அனீமியாவில் இருந்து காப்பாற்றப்பட்ட திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் செல்வாவும் அவரது உயிரைக் காப்பாற்ற இரத்த ஸ்டெம் செல் தானமளித்த பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் பார்மசிஸ்ட் ஆன 26 வயது டாக்டர்.ஸ்மிதா ஜோஷியும் முதன்முறையாகச் சந்தித்தனர். டாக்டர் அருணா ராஜேந்திரனின் கீழ் சிகிச்சை பெற்ற செல்வா, அவர் பெற்ற இரத்த ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையால் புது வாழ்வு பெற்று, தற்போது 7 ஆம் வகுப்பில் படித்து வருகிறார்.

 

 

 

தன் பணியில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் சுகாதாரத் துறை நிபுணரான டாக்டர். ஸ்மிதா ஜோஷி, மற்றவர்களுக்கு உதவுவதில் கொண்டுள்ள தனது ஆர்வத்தால் உந்தப்பட்டு DKMS BMST அறக்கட்டளையில் ஸ்டெம் செல்லை தானமாக அளித்தார். அவரது குடும்பத்தினர் இதற்கு ஆதரவு தராத போதிலும், அவர் தனது பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தானமளிக்க முன்வந்தார். "இது நான் செய்ய வேண்டிய கடமை என்று நான் உணர்ந்தேன். என்னால் வாழ்க்கையில் இன்னொருவருக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்க முடியும் என்பதே இதற்குப் போதுமான உந்துதலை வழங்கியது" என்று ஸ்மிதா கூறினார்.

 

 

 

"எங்கள் மகனின் உயிரைக் காக்க உதவிய டாக்டர் ஸ்மிதா ஜோஷியின் இச்செயலுக்காக நாங்கள் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். செல்வா குணம் பெற்றது வழக்கத்துக்கு மாறான ஒன்று," என்று இதனால் பலனடைந்த செல்வாவின் பெற்றோர் தெரிவித்தனர்.

 

 

 

செல்வாவுக்கு ஃபான்கோனி அனீமியா என்ற அரிய மரபணு கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது, இது எலும்பு மஜ்ஜை இரத்த அணு உற்பத்தி செய்யும் திறனை பாதிக்கிறது. செல்வா உயிர்வாழ ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழி என்ற நிலை. “ஃபான்கோனி அனீமியா என்பது அரிதான ஆனால் கடுமையான மரபணுக் கோளாறாகும். இது எலும்பு மஜ்ஜை செயலிழப்பு மற்றும் லுகேமியா போன்ற உயிருக்கு ஆபத்தான மருத்துவ நிலைகளுக்கு வழிவகுக்கும். இதனால் பாதிப்படைந்தவர்களுக்கு பெரும்பாலும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தேர்வாகும். செல்வாவின் மாற்று சிகிச்சைக்குப் பிறகு அவர் முழுமையாக குணமடைந்து வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். டாக்டர். ஸ்மிதா ஜோஷி போன்று பலர் முன்வந்து ஸ்டெம் செல் நன்கொடையாளர்களாகப் பதிவு செய்து தானமளிப்பது மிகவும் முக்கியமானது. இது பல நோயாளிகளுக்கு நம்பிக்கையையும் உயிர்காக்கும் சிகிச்சையையும் அளிக்கும்.” என சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் நலப் பிரிவு, ஹெமாட்டாலஜி துறையில் இணைப் பேராசிரியர் மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் எலும்பு மஜ்ஜை மாற்றுப் பிரிவின் பொறுப்பாளருமான, டாக்டர் அருணா ராஜேந்திரன் கூறினார்.

 

 

 

இந்தியாவில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருவர் ரத்த புற்றுநோய் அல்லது தலசீமியா அல்லது அப்லாஸ்டிக் அனீமியா போன்ற ரத்தக் கோளாறு இருப்பதாகக் கண்டறியப்படுகிறார்கள். இதில் கணிசமான எண்ணிக்கையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உள்ளனர் மற்றும் இவர்களில் பலருக்கு இரத்த ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே உயிர் வாழ ஒரே வழியாகும். அதோடு, இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைய, பொருத்தமான மனித லிகோசைட் ஆன்டிஜென் (HLA) நன்கொடையாளரை அறிவதும் அவசியமான ஒன்று. துரதிர்ஷ்டவசமாக, பதிவு செய்யப்பட்ட இரத்த ஸ்டெம் செல் நன்கொடையாளர்கள் குறைந்தாஸ் அளவே உள்ள நிலையில், பெரும்பாலான நோயாளிகளுக்கு சரியான பொருத்தம் அமைவதில்லை. இணக்கமான கொடையாளர் அமையும் வாய்ப்பு மில்லியனில் ஒன்று என்பதால், இந்தியாவில் தனிநபர்கள் அதிக அளவில் முன்வந்து சாத்தியமான நன்கொடையாளர்களாக பதிவு செய்ய வேண்டிய அவசரத் தேவை உள்ளது.

 

 

 

DKMS BMST ஃபவுண்டேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி பேட்ரிக் பால் கூறுகையில், "இந்தியாவில் ஆண்டுதோறும் 70,000க்கும் மேற்பட்டோர் ரத்த புற்றுநோய் மற்றும் ரத்தக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, ஸ்டெம் செல் தானம் செய்பவர்கள் அதிக அளவில் முன்வர வேண்டிய அவசியம் உள்ளது. ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை சார்ந்து HLA பொருத்தம் கொண்ட கொடையாளர்கள் கிடைப்பது இந்தியாவில் பெரும் சவாலாக உள்ளது. தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவ இரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்வது, தீவிர நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு மறு வாழ்வு அளிக்க முன்வரும் தன்னார்வத் தொண்டாகும். டாக்டர் ஸ்மிதா தானமளிக்க முன்வந்தது அவர் ஒருவர்பால் கொண்டுள்ள அனுதாபத்தின் வெளிப்பாடாகும், செல்வாவுக்கு நடந்தது போன்ற நிகழ்வுகள் ஸ்டெம் செல் தானத்தால் ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தின் சக்தியை நமக்கு எடுத்துரைகிறது.” என்றார்.

 

 

 

செல்வாவின் சிகிச்சைக்கான செலவை ஏற்க செல்வாவின் பெற்றோர்கள் வசதியற்ற நிலையில் இந்த உயிர்காக்கும் சிகிச்சையான ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையை செல்வா பெற DKMS-BMST அவருக்கு உதவி புரிந்தது.

 

 

 

இந்தியாவில், நலிவடைந்த சமூகப் பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த நோயாளிகள், இரத்தப் புற்றுநோய் மற்றும் பிற இரத்தக் கோளாறுகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான சிகிச்சையைப் பெற பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். சிகிச்சைச் தேர்வுகள் பற்றிய வழிகாட்டுதல் மற்றும் நிதி உதவிக்கான சாத்தியமான ஆதாரங்கள் இச் சவாலை மேலும் கடினமாக்கும் மிக முக்கியமான காரணிகளாகும். அரசு மற்றும் பிற நிதி ஆதரவு உட்பட வளங்கள் நோயாளிகளின் அனைத்து செலவினங்களையும் ஈடுகட்ட போதுமானதாக இல்லாத நிலையில் DKMS BMST நோயாளிகள் நிதியளிப்புத் திட்டமானது இந்தியாவில் உள்ள நலிவுற்ற சமூகப் பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குப் பகுதியளவு நிதி உதவியை வழங்க முன்வருகிறது. இத் திட்டத்தின் முன்முயற்சிகள் பல நோயாளிகளுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் அமைய உதவுவதோடு, அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வாய்ப்பை அளித்துள்ளது.

 

 

 

“ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக, இந்தியாவில் இரத்த புற்றுநோய் மற்றும் இரத்தக் கோளாறு நோயாளிகள் மறுவாழ்வு பெரும் வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம். நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நிதி சவாலை குறைக்க உதவுவதே இதன் முக்கியப் பங்காகும். DKMS நோயாளிகள் நிதியளிப்புத் திட்டத்தின் மூலம், நலிவுற்ற வர்க்கத்தைச் சேர்ந்த இரத்தப் புற்றுநோய் மற்றும் இரத்தக் கோளாறு நோயாளிகளுக்கு ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை செலவுகளில் ஒரு பகுதியை ஈடுகட்டுவதன் மூலம் இதற்க்கு நாங்கள் பங்களிக்கிறோம்” என அவர் மேலும் தெளிவுபடக் கூறினார்.

 

 

 

DKMS BMST அறக்கட்டளை இந்தியா, ஸ்டெம் செல் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டு தனி நபர்களை நன்கொடையாளர்களாகப் பதிவு செய்ய ஊக்குவிக்கிறது. செல்வாவுக்கு நடந்த நிகழ்வு மற்றும் ஸ்மிதா போன்ற நன்கொடையாளர்களின் உதவியும், செல்வா போன்று காத்திருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

 

 

 

ஸ்டெம் செல் தானம் செய்பவராகப் பதிவு செய்ய, நீங்கள் 18 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான இந்தியராக இருக்க வேண்டும். நீங்கள் பதிவு செய்ய விரும்பினால், ஒப்புதல் படிவத்தை பூர்த்தி செய்யவும் மற்றும் உங்கள் திசு செல்களை சேகரிக்க உங்கள் கன்னங்களின் உள்பகுதியில் ஸ்வாப் செய்யவும். உங்கள் திசு மாதிரியானது HLA (Human Leukocyte Antigen)வுக்கான ஆய்விற்காக லேபிற்கு அனுப்பப்பட்டு, பொருந்தும் ஸ்டெம் செல் நன்கொடையாளர்களுக்கான சர்வதேச தேடல் தளத்தில் அநாமதேயமாக பட்டியலிடப்படும். நீங்கள் இதற்குத் தகுதியுடையவரெனில், www.dkms-bmst.org/register இல் உங்கள் வீட்டு ஸ்வாப் கிட்டை ஆர்டர் செய்து இரத்த ஸ்டெம் செல் தானமளிப்பவராகப் பதிவு செய்யவும்