1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today gold and silver rate at Chennai

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சிறிய அளவில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை மற்றும் ஒரு கிலோ வெள்ளை விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 6,680 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 53,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,150  எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,200 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 95.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 95,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
 
 
Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!