1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today gold and silver rate at chennai

நீண்ட ஏற்றத்திற்கு பின் மெல்ல குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

Gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்று சிறிது அளவு விலை குறைந்துள்ளது பொது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தினாலும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.52,000ஐ நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 6,430ரூபாயும் ஒரு சவரனுக்கு 200 ரூபாயும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,430 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்  ரூபாய் 51,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6900 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,200 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 82.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 82000 எனவும் விற்பனையாகி வருகிறது

 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பாஜக எனக்கு 500 கோடி ரூபாய் தருவதாக சொன்னார்கள்: சீமான் அதிர்ச்சி தகவல்..!