தொடர்புடைய செய்திகள்
- வெள்ளியங்கிரி மலையேறிய 50 வயது நபர் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு! ஒரே மாதத்தில் 5 பேர் மரணம்..!
- இயேசு கிறிஸ்துவின் மரணம் குறித்து அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்த தகவல்கள்
- Fans war இந்தியாவில் அசிங்கமான நிலைக்கு செல்கிறது… அஸ்வின் ஆதங்கம்!
- பெரும் ஏற்றத்திற்கு பின் சிறிய அளவில் குறைந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!
- ஒரே நாளில் ரூ.1120 உயர்வு.. புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..!
இன்று ஒரே நாளில் ரூ.680 உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கியது..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த வாரம் மிக அதிகமாக உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 85 ரூபாயும் ஒரு சாதாரண க்கு 680 ரூபாயும் உயர்ந்துள்ளது என்பதும் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கி உள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,455 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் ரூபாய் 51,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6755 எனவும் ஒரு சவரன் ரூபாய் 54,040 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 81.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81,600 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
