செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 மார்ச் 2024 (11:30 IST)

2 நாள் ஏற்றத்திற்கு பின் இன்று திடீரென குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு கிராம் என்ன விலை?

Gold
தங்கம் விலை நாளைக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது தங்க நகை வாங்கும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.6115 என்றும் ஒரு சவரன் தங்கம் ரூ.48920 என்றும் விற்பனையாகி வருகிறது அதே போல் சென்னையில் இன்று 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.6585 என்றும் ஒரு சவரன் ரூ.52680 என்றும் விற்பனையாகி வருகிறது 
 
தங்கம் விலை இறங்கினாலும் வெள்ளியின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் 80 ரூபாய் 30 காசுகள் என்றும் ஒரு கிலோ 80 ஆயிரத்து 300  ரூபாய் என்று விற்பனையாகி வருகிறது 
 
தங்கம் விலை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran