1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

ரூ.47 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன் தங்கம்.. ஒரே நாளில் ரூ.720 அதிகரிப்பு..!

சென்னை
இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் இனி கூடுதலாக அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5870.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 720 அதிகரித்து ரூபாய் 46960.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6340.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50720.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 70 காசுகள் உயர்ந்து ரூபாய் 82.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 82200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பங்குச்சந்தை இன்று திடீர் உயர்வு.. முதலீட்டாளர்கள் குஷி..!