1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. ஒரே நாளில் ரூ.160 குறைந்தது..!

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூபாய் 160 தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 5530.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து  ரூபாய் 44240.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6000.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48000.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து   ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஏராளமான இழப்பை சந்திக்கும் முதலீட்டாளர்கள்..!