1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.240 உயர்வு..!

சென்னை
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை 30 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் விலை 240 ரூபாயும் உயர்ந்துள்ளது.
 
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5530.00 என்றும் ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 240 என்று விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6000 என்றும், 8 கிராம் ரூ.48000 என்றும் விற்பனையாகிறது.
 
மேலும்  வெள்ளி ஒரு கிலோவுக்கு 700 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் ஒரு கிலோ ரூ.78200.00 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் ஆஜராக வேண்டும்: சென்னை போலீசார் உத்தரவு..!