1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

சிலநாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

சென்னை
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5500.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 44000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5970.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47760.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 110 காசுகள் உயர்ந்து ரூபாய் 77.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!