ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 24 டிசம்பர் 2022 (08:16 IST)

216 நாளாக மாறாத பெட்ரோல் & டீசல் விலை!

216 நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவிப்பு.


சென்னையில் கடந்த 215 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் 216 நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமான கச்சா எண்ணெய்யை வாங்கினாலும் அதன் பயனை மக்களுக்கு அனுபவிக்க விடாமல் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து வருகின்றன என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு களாக உள்ளன. இதனை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.