இன்று முதல் 4 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் டிசம்பர் 23 முதல் டிசம்பர் 27ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பாக டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தூத்துக்குடி ராமநாதபுரம் சிவகங்கை தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்பட 8 மாவட்டங்களில் டிசம்பர் 25ஆம் தேதி கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Edited by Mahendran