வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 2 அக்டோபர் 2024 (07:22 IST)

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் : இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு..!

இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கிடையே போர் தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில், இரு நாடுகளில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 நேற்றிரவு திடீரென இஸ்ரேல் மீது ஈரான் சரமாறியாக ஏவுகணைகளை வீசியதை அடுத்து, பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“ஈரான் மிகப்பெரிய தவறு செய்துள்ளது, அதற்கான விலையை கொடுக்க வேண்டும்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதே நேரத்தில், லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக நடத்தி வருவதாகவும், இந்த தாக்குதலின் காரணமாக இஸ்ரேல் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மத்திய இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க ராணுவம் அறிவுறுத்தி உள்ளதாகவும், மத்திய இஸ்ரேல் முழுவதும் தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் தாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.மேலும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு, பாதுகாப்பு முகாம்களில் இருக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் உதவிக்கு +972 547520711; +972 543278392 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



Edited by Siva