மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. நீண்ட சரிவுக்கு பின் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி..!
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக மிகப் பெரிய அளவில் சரிந்ததால், கோடி கணக்கில் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர். இதையடுத்து, இன்று ஓரளவு பங்குச் சந்தை உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக, இந்திய பங்குச் சந்தை உட்பட உலகம் முழுவதும் பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து வருகிறது. இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், சில நேர்மறை (positive) நடைமுறைகள் ஏற்பட்டுள்ளதால், இந்திய பங்குச் சந்தை உயர்ந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 448 புள்ளிகள் உயர்ந்து 76,670 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதைப் போல, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 139 புள்ளிகள் உயர்ந்து 23,000 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, கோடக் மகேந்திரா வங்கி, சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, Tata மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், ஐடிசி, பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல், விப்ரோ, மாருதி, எச்.சி.எல் டெக்னாலஜி, டிசிஎஸ், ஹீரோ மோட்டார்ஸ், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva