வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
இன்று வாரத்தின் முதல் நாளே, இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவில் இருப்பதை அடுத்து, முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே, இந்திய பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஐந்து நாள் பங்குச் சந்தை வர்த்தகம் நடந்தால், மூன்று நாள் ஏற்றத்திலும், இரண்டு நாள் சரிவிலும் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், இன்று பங்குச் சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 213 புள்ளிகள் சரிந்து 77465 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 65 புள்ளிகள் சரிந்து 23,427 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச் சந்தையில் இன்று, பிரிட்டானியா, பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர், ஸ்டேட் வங்கி, ஹீரோ மோட்டார், பஜாஜ் ஆட்டோ, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, இன்டஸ் இன்ட் வங்கி, HCL டெக்னாலஜி, மாருதி, டைட்டான், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva