1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Share market sensex, nifty status today

சென்ற வார சரிவை சரிசெய்யும் பங்குச்சந்தை.. முதல் நாளே ஏற்றத்தில் சென்செக்ஸ்..!

பங்குச்சந்தை
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிவிலிருந்தது என்பதையும் குறிப்பாக கடந்த வாரம் மிகப்பெரிய அளவில் சரிந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை சற்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 184 உயர்ந்து 65131 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.  
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 19,352 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது,. ஒரு வாரமாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்த நிலையில் இன்று பங்கு சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதேபோல் இனிவரும் நாட்களிலும் பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. தொடர்ந்து உயருமா?