வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (08:12 IST)

முதல் தலைமுறையை கெடுக்க இந்தி எதிர்ப்பு போராட்டம்.. 2வது தலைமுறையை கெடுக்க நீட் போராட்டம்: வானதி

தமிழ்நாட்டின் முதல் தலைமுறையை கெடுக்க இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய திமுக தற்போது மூன்றாவது தலைமுறையை கெடுக்க நீட் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 
 திமுக நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டம் குறித்து கருத்து கூறிய வானதி சீனிவாசன்  திமுகவின் நாடகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டுவார்கள் என்றும் அரசியல் ஆதாயத்திற்காக நீட் தேர்வு விவகாரத்தில் தீர்வு காண திமுக அக்கறை காட்டவில்லை என்றும் தெரிவித்தார். 
 
முதல் தலைமுறையை கெடுக்க இந்திய எதிர்ப்பு போராட்டம் நடத்திய திமுக மூன்றாம் தலைமுறை கெடுக்க நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். 
 
Edited by Siva