நேற்றைய ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
நேற்று பங்குச்சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் இன்று பங்குச்சந்தை திடீரென சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பங்கு சந்தை காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 107 புள்ளிகள் சரிந்து 67 ஆயிரத்து 19 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 56 புள்ளிகள் சரிந்து 19940 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
நேற்று சென்செக்ஸ் ஐநூறு புள்ளிகள் உயர்ந்த நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்து உள்ளதால் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இந்த வாரம் முழுவதும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Edited by Siva