ஏற்ற இறக்கமின்றி பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
பங்குச்சந்தை இன்று பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி வர்த்தகம் நடந்து வருகிறது.
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 10 புள்ளிகள் மட்டும் சரிந்து 65 ஆயிரத்து 860 என்ற வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையும் 10 புள்ளிகள் சார்ந்து 19,601 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நேற்று வர்த்தகம் முடிந்த போது உள்ள புள்ளிகளை ஒட்டி தான் இன்றும் தற்போது வர்த்தகமாகி வருவதால் ஏற்ற இறக்கமின்றி பங்குச்சந்தை இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இன்னும் சில மணி நேரத்தில் பங்குச்சந்தை ஏறோ அல்லது இறங்க வாய்ப்பு இருப்பதாகவும் இன்றைய தினம் அமைதியாக பங்குச்சந்தையை வேடிக்கை பார்ப்பது நல்லது என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
Edited by Siva