1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Share market sensex and nifty status

2வது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

பங்குச்சந்தை
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்றும் இதனால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் தகுந்த ஆலோசகர்களை அணுகி முதலீடு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச்சந்தை ஆரம்பத்தில் உயர்ந்தாலும் அதன் பின் கீழே சரிந்தது. இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 25 புள்ளிகள் உயர்ந்து 62,806  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.  
 
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 18,604 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை வர்த்தகம் இன்று ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நீண்ட சரிவுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!