திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 மே 2023 (09:43 IST)

வாரத்தின் முதல் நாளே ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்திய பங்குச்சந்தை இன்று வாரத்தின் முதல் நாளிலேயே 400 புள்ளிகளுக்கும் அதிகமாக ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 425 புள்ளிகள் உயர்ந்து 62925 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 18,610 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை ஏற்றம் கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் வரும் நாட்களில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால் தகுந்த ஆலோசகரை கலந்து ஆலோசித்து அதன் பின் பங்குச்சந்தையில் முதலீடு செய்யுமாறு பங்குச்சந்தை வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva