மீண்டும் சரிந்த சென்செக்ஸ். முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
இந்திய பங்குச் சந்தை கலந்தது சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று பங்கு சந்தை காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 208 புள்ளிகள் சரிந்து 59754 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 42 சரிந்து என்ற 17816 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் புதிதாக முதலீடு செய்பவர்கள் பொருளாதார வல்லுநர்களை கலந்து ஆலோசித்து அதன் பிறகு முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Siva