தொடர்புடைய செய்திகள்
- வாரத்தின் முதல் நாளே அபாரம்.. 300 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்!
- சென்செக்ஸ் தொடர் சரிவு.. 60 ஆயிரத்திற்கு கீழ் இறங்குமா?
- தொடர்ந்து சரியும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!
- திடீரென 300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
- பங்குச்சந்தை சென்செக்ஸ், நிப்டி இன்றைய நிலவரம் என்ன?
நேற்று ஒருநாள் தான்.. மீண்டும் சரிந்த பங்குச்சந்தை!
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நேற்று பங்கு சந்தை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் வரை உயர்ந்தது. கடந்த ஒரு வாரமாக இந்த பங்குச் சந்தையில் நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள் ஓரளவு ஈடுகட்டினார்கள். இந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 270 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனையடுத்து 60 ஆயிரத்து 350 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி இருக்கிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 70 புள்ளிகள் சரிந்து 18029 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரம் முழுவதும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் இருக்கும் என்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Edited by Siva
