செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (08:31 IST)

வண்டியே ஓட்டாதீங்க... ஷாக் கொடுக்கும் பெட்ரோல் & டீசல் விலை!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது என்பதும் சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு ரூபாய் என்ற விலையில் உயர்ந்து கொண்டு வருவதால் பெட்ரோல் விலை 105 ரூபாய் நெருங்கிக் கொண்டு வந்தது என்பதும் டீசல் விலை 101 ரூபாயை நெருங்கிக் கொண்டு வந்தது என்பதையும் பார்த்தோம்.  
 
இந்நிலையில் தற்போது பெட்ரோல் ரூ.105, டீசல் ரூ,101 கடந்துள்ளது. ஆம், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.74 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.101.92 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.