திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (17:06 IST)

ஏற்றத்துடன் முடிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 427 புள்ளிகள் உயர்ந்து 54,178 புள்ளிகளானது. 

 
இந்த வாரம் திங்கட்கிழமை முதல் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பங்குசந்தை உயர்ந்து வந்த நிலையில் இன்று 4வது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதும் இதனால் பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். இந்த வாரத்தின் துவக்கம் முதல் மீண்டும் படிப்படியாக பங்குச்சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
முதலீட்டாளர்கள் பங்குகளை ஆர்வமாக வாங்கியதால் சென்செக்ஸ் 53,000 புள்ளிகளையும், நிஃப்டி 16,000 புள்ளிகளையும் கடந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 427 புள்ளிகள் உயர்ந்து 54,178 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 143 புள்ளிகள் உயர்ந்து 16,133 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது.
 
மேலும், சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாகின.