செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (17:30 IST)

தமிழ் நடிகைகளுக்கு நெருக்கடி - பிரியாமணி

தமிழ் சினிமாவில், கண்களால் கைது செய் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் பிரியாமணி. இதையடுத்து அமீர் இயக்கத்தில், கார்த்தி ஜோடியாக நடித்ததற்காக பிரியாமணி தேசிய விருது பெற்றார்.

தற்போது, இந்தியில் வெப் சீரியல்களில் நடித்து மீண்டும் ரசிக்ர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், மும்பை நடிகைகளால் தென்னிந்திய நடிகைகள் பலர் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், முன்பு, நடிகைகளின் தோற்றத்திற்கு எதிர்பார்ப்பில்லை; ஆனால் மும்பை நடிகைகளின் வருகைக்குப் பின் நாயகிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக நடிகைகள் ஒல்லியாக இருக்க வேண்டும் நிறமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது இந்த நிலையில் மாறி வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.