ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (11:02 IST)

தமிழ்நாட்டிலேயே கொடைக்கானலில் பெட்ரோல் & டீசல் விலை உச்சம்!

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கொடைக்கானலில் டீசல் விலை ரூ.100-ஐ கடந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 107.45 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 97.52 எனவும் விற்பனையாகிறது.
 
இந்நிலையில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கொடைக்கானலில் டீசல் விலை ரூ.100-ஐ கடந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல கொடைக்கானலில் பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ.110.32 ஆக அதிகரித்துள்ளது. 
 
கொடைக்கானல் மலைப்பகுதி என்பதால் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்ல போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.