திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 30 மார்ச் 2022 (08:29 IST)

திமுக வழக்கறிஞர் கார் மீது பெட்ரோல் குண்டு விச்சு: சென்னையில் பரபரப்பு!

திமுக வழக்கறிஞர் கார் மீது பெட்ரோல் குண்டு விச்சு: சென்னையில் பரபரப்பு!
சென்னையில் திமுக வழக்கறிஞர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்ம நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை எண்ணூர் பகுதி திமுக வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென கார் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
 
அதன் பிறகு வழக்கறிஞர் ஹரிஹரனை பயங்கர ஆயுதங்களால் தாக்க முயற்சித்ததாகவும் ஆனால் லேசான காயங்களுடன் வழக்கறிஞர் ஹரிஹரன் உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஹரிஹரனிடம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்