ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 31 மார்ச் 2022 (09:39 IST)

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: புதிய உச்சம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 107.45 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 97.52 எனவும் விற்பனையாகிறடு.
 
 கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய்க்கும்  அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது