1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Stock Market Shows Mild Reaction Despite War Tensions Between Nations

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக சரிவு.. ஆனாலும் ஒரு ஆறுதல்..!

share
இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் பங்குச்சந்தை மிக மோசமாக சரியும் என்று கூறப்படும் நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று சரிந்தாலும், பெரிய அளவில் சரியவில்லை என்பது முதலீட்டாளர்களுக்கு ஒரு ஆறுதலாக உள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று வெறும் 95 புள்ளிகள் மட்டும் சரிந்து, 80,551 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி வெறும் 27 புள்ளிகள் மட்டும் சரிந்து, 24,351 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், டிசிஎஸ், டாட்டா ஸ்டீல், சன் பார்மா, மாருதி, இன்ஃபோசிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, HCL டெக்னாலஜி, ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
போர் பதட்டம் இருந்தும் தங்கம் விலை இன்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?