1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Stock Market Opens Lower Amid Volatility

பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன? சென்செக்ஸ், நிப்டி அப்டேட்..!

பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் உயர்ந்த நிலையில், நேற்று காலை உயர்ந்து பின்னர் திடீரென மதியத்திற்கு மேல் சரிந்தது. இந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை சரிவில் வர்த்தகம் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 40 புள்ளிகள் சரிந்து 81,757 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி ஒரே ஒரு புள்ளி மட்டும் சரிந்து 25,044 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் லீவர், இண்டிகோ, ஐ.டி.சி, ஜியோ பைனான்ஸ், ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா ஸ்டீல், டி.சி.எஸ், டெக் மகேந்திரா, ட்ரெண்ட் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
 
அதே நேரத்தில், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.டி.எஃப்.சி வங்கி, இன்போசிஸ், கோடக் மகேந்திரா வங்கி, மாருதி, ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை இன்றும் உயர்வு.. ரூ.91000க்கும் அதிகமான ஒரு சவரன் விலை.. ரூ.1 லட்சம் எப்போது?