1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Stock Market Rallies for Second Straight Day; Sensex and Nifty Up

2வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

இந்தியப் பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை ஏற்றத்தில் இருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் உயர்வில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 82,150 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 107 புள்ளிகள் உயர்ந்து 25,180 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
 
இன்று அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஆசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி., ஜியோ பைனான்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்டப் பங்குகள் உயர்வில் விற்பனையாகி வருகின்றன.
 
அதேபோல், ஆக்சிஸ் வங்கி, இண்டிகோ, இன்ஃபோசிஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் குறைந்து வர்த்தகம் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தலைமை நீதிபதி மீது செருப்பு வீசியதில் எந்த வருத்தமும் இல்லை: வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்