1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Price Continues to Soar, Crossing ₹91,000 Mark

தங்கம் விலை இன்றும் உயர்வு.. ரூ.91000க்கும் அதிகமான ஒரு சவரன் விலை.. ரூ.1 லட்சம் எப்போது?

தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ90 ஆயிரத்தை தாண்டி ஒரு லட்ச ரூபாயை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.15-ம், ஒரு சவரனுக்கு ரூ.120-ம் உயர்ந்துள்ள நிலையில், தங்கம் விலை போலவே வெள்ளி விலையும் மிக அதிகமாக உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,385
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 11,400
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 91,080
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 91,200
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,420
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,436
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 99,360
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  99,488
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 171.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 171,000.00
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மதுரை அருகே தொட்டியில் மலம் கலக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்: ஆட்சியர் பிரவீன் குமார் விளக்கம்