புதன், 31 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : புதன், 27 ஆகஸ்ட் 2025 (11:24 IST)

மீண்டும் ரூ.75,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் உயர வாய்ப்பு என தகவல்..!

மீண்டும் ரூ.75,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் உயர வாய்ப்பு என தகவல்..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று அதன் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 35 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை 280 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு, நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 
தங்கத்தின் விலை உயர்ந்தாலும், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் வெள்ளி நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி, சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறித்த விவரங்களை காணலாம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,355
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 9,390
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,840
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,120
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,205
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,243
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,640
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  81,944
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.130.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.130,000.00
 
 
Edited by Siva