1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Price Jumps Again; Sovereign Reaches ₹87,600

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

தங்கம்விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி மீண்டும் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ. 87,600-க்கு விற்பனையாகிறது.
 
தங்கம் விலை இந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இது மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வாகும். கடந்த மாதம் 23ஆம் தேதி முதன்முறையாக ஒரு சவரன் ரூ. 85,120-க்கு விற்பனை செய்யப்பட்டு, தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது.
 
நேற்று மாலை வர்த்தகத்தில் ஒரு சவரன் ரூ. 87,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 87,040-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது, மீண்டும் ரூ. 560 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 87,600 என்ற அதே விலைக்கு விற்பனையாகிறது.
 
ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 70 உயர்ந்து தற்போது ரூ. 10,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
மொத்தத்தில், இன்று காலை குறைந்திருந்த தங்கம் விலை, மாலையில் மீண்டும் உயர்ந்து, முந்தைய நாளின் உச்ச விலையை தொட்டுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva