காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,560 உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சவரன் விலை ரூ. 1,600 உயர்ந்து ரூ. 98,000 ஆக இருந்தது. பிற்பகலில் மேலும் ரூ. 960 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ. 98,960 என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 12,370 என்ற விலையில் உள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்ச ரூபாயை தொட இன்னும் 1040 ரூபாய் தான் உள்ளது.
அதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,000 உயர்ந்து ரூ. 2.16 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே இன்று புதிய உச்ச விலையை தொட்டுள்ளன.
Edited by Mahendran