வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (14:25 IST)

ஒரு பவுன் 28,000 ரூபாய் – விண்ணைத் தொடும் தங்கம் விலை !

சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் கிலை பவுனுக்கு 568 ரூபாய் உயர்ந்து ரூ.28,352 க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்நிலையில் இன்ற்உ . சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,544 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 71 ரூபாய் அதிமாகும்.  இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று ரூ.27,784லிருந்து இன்று ரூ.28,352 ஆக உயர்ந்துள்ளது. இதேப்போல 8 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.29,040லிருந்து ரூ.29,608 ஆக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் இந்த கிடுகிடு விலை உயர்வுக்கு தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்த விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இனி தங்கம் வாங்கும் ஆசையை விட்டுவிடும் சூழல் உருவாகியுள்ளது.