காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் இன்று எதிர்பாராத ஏற்ற இறக்கம் காணப்பட்டது.
காலை வர்த்தகத்தின் போது தங்கம் வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில், மாலை வர்த்தகத்தில் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. காலையில், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,800 குறைந்து ரூ. 88,800-க்கு விற்பனையானது; ஒரு கிராம் தங்கம் ரூ. 225 குறைந்து ரூ. 11,100-க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில், மாலை வர்த்தகம் முடிவடையும் தருவாயில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,600 உயர்ந்து ரூ. 90,400-ஐ எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 200 உயர்ந்து ரூ. 11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே, இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 165-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Edited by Mahendran